search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்"

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    பாராளுமன்றம்

    ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்து அதன் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்..  அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Governmentready #Parliamentallpartymeet
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி சார்பொல் ராம் கோபால் யாதவ், சி.பி.ஐ. சார்பில் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை கேட்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இடையூறின்றி சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.



    மேலும், பொதுநன்மை சார்ந்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டதாக இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்தார்.

    எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மீண்டும் ரபேல் போர் விமான ஊழல் மற்றும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமை தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார். #Governmentready #Parliamentallpartymeet
    குளிர்கால கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சோனியா மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்திய விவகாரம் புயலைக் கிளப்பும். #ParlimentWinterSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8-ந் தேதி முடிகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் சிறப்பு பெறுகிறது.

    குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதேபோன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில், குளிர்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை ஆளுங்கட்சி கோரும் என தகவல்கள் கூறுகின்றன.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை உடனே கட்ட வேண்டும் என்ற கருத்து சங்பரிவார அமைப்புகள் மத்தியில் வலுத்து வருகிறது. இதை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக்கிறது.

    அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் தாமதமின்றி, உடனடியாக கட்டப்பட வேண்டும். ராமர் கோவில் என்பது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அம்சம். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிகிறவரையில் அயோத்தி பிரச்சினை குறித்த வழக்கில் விசாரணையை ஒத்தி போட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியதில் அடிப்படை இல்லை” என கூறினார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராமர் கோவில் பிரச்சினையில் ஓரணியில் நின்று புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எப்படி கையாளப்போகிறது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.



    5 மாநில தேர்தலில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிற ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில் அவை பலிக்கிறபோது அது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும்.

    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ராஜஸ்தானில் எழுந்த நில மோசடி புகாரில், அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்தது.

    இந்த விவகாரத்தை அந்தக் கட்சி, பாராளுமன்றத்தில் எழுப்பும் என கூறப்படுகிறது.

    ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில்,பாராளுமன்றத்திலும் இது குறித்து அவர் குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    மசோதாக்களை பொறுத்தமட்டில் ‘முத்தலாக்’ மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பாரதிய ஜனதா கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.

    சி.பி.ஐ. இயக்குனர், சிறப்பு இயக்குனர் மோதலில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பப்போவது உறுதி.

    பாராளுமன்றம் நாளை கூடுகிறபோது முதலில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

    எனவே புதன்கிழமையில் இருந்து பாராளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று டெல்லியில் நடக்கிற பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதே போன்று பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டமும் இன்று மதியம் நடக்க இருக்கிறது. இதில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கையாள வேண்டிய உத்தி குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. #ParlimentWinterSession
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக வருகிற 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்கி ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முழுமையான கூட்டத் தொடர் இது என்பதால் பாராளுமன்ற இரு அவைகளையும் சுமுகமாக, ஒருமித்த கருத்துடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

    இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளான 10-ந் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மரபாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடி 10-ந் தேதி கூட்டத்தில், சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.



    குறிப்பாக மாநிலங்களவையில் நிலுவையில் கிடக்கும் உடனடி முத்தலாக் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்து இருப்பது நினைவு கூரத்தக்கது.

    இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குளிர்கால தொடருக்காக பாராளுமன்றம் கூடும் தினத்தில், அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அன்று ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்க மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடர் தாமதமாக தொடங்குவதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParlimentWinterSession #OppositionParties
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இதையடுத்து, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.



    இதற்கிடையே, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க எதிர்கட்சிகள் சார்பில் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க முடிவாகியுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து டிசம்பர் 10-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #ParlimentWinterSession #OppositionParties
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக எதிர்கட்சிகள் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. #ParlimentWinterSession #CCPA
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை இன்று அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்துள்ளது. #ParlimentWinterSession #CCPA
    தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 3-வது வாரத்தில் தாமதமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும்.

    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.



    தேர்தல் பிரசாரத்துக்கு வசதியாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப் போடுவது பற்றி டெல்லியில் இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்தது.

    இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    இதுபற்றி மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பிறகு குளிர்கால கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். #Parliament

    ×